மாயவரத்துக்கு அருகில் உள்ள குத்தாலம் இரயில் நிலையத்திற்குத் தெற்கே சுமார் 10 கி. மீ. தொலைவில் உள்ளது.
தேவாரப் பாடல் பெற்ற சிவத்தலம். வீழிச்செடிகள் நிறைந்திருந்த காரணத்தால் 'வீழிமிழலை' என்று பெயர் பெற்றது. திருமால் சக்கரம் பெற வேண்டு இங்குள்ள இறைவனை ஆயிரம் மலர்களால் பூஜை செய்யும்போது ஒரு மலர் குறைவாக இருப்பதைக் கண்டு தம் கண்ணையே பெயர்த்து மலராகச் சாத்தி வழிபட்டார். சிவபெருமான் காட்சி திருமாலுக்கு சக்கரத்தையும், கண்ணையும் அளித்தார். மூலவருக்குப் பின்புறம் இறைவன் திருமணக் கோலத்தில் காட்சி தருகிறார். பஞ்சம் வந்தபோது திருஞானசம்பந்தருக்கும், அப்பருக்கும் இறைவன் படிக்காசு தந்து அவர்கள் மூலமாகச் சிவனடியார்களுக்கு அன்னம் படைத்த தலம். இத்தலத்தில் உள்ள வெளவால் நத்தி மண்டபம் சிறந்த வேலைப்பாடுகள் கொண்டது. |